தூதுவளை மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் பாதிப்பு
நெல்லை: தூதுவளை மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை சந்திப்பு புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் மிட்டாய் கடைகளில் சமீபகாலமாக தூதுவளை மிட்டாய் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் ஒருவித மருத்துவ பொருள் சேர்க்கப்படுவதால் பலர் இதை வாங்கி சாப்பிடுகின்றனர்.
சாக்லெட் போல் இனிக்கும் பொருள் என்பதால் குழந்தைகளும் இதை அதிகம் வாங்கி சாப்பி்ட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக இதை வாங்கி சாப்பிட்டு வந்த குழந்தைகள் ஒருவித மயக்கத்துடன் நரம்பு மண்டல பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் நெல்லை தனியார் மருத்துவமனையில் கை, கால், கழுத்து உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த 3 குழந்தைகள், கடையநல்லூரைச் சேர்ந்த 9 குழந்தைகள், கோவில்பட்டியைச் சேர்ந்த 2 குழந்தைகள் தற்போது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூதுவளை மி்ட்டாய்களை ஆயுர்வேத மருந்து என விற்பனை செய்வதால் மாநகர சுகாதார அதிகாரிகள் இதன் விற்பனையைத் தடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர். உணவுப் பண்டம் என விற்பனை செய்தால் மட்டுமே தூதுவளை மிட்டாயை பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications