என்கவுன்டர் போலீசாருக்கு ரூ.25,000 பரிசு - பொள்ளாச்சி வியாபாரிகள் முடிவு!!
கோவை: பள்ளி மாணவர்களை கடத்தி, சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசாருக்கு ரூ 25 ஆயிரம் வெகுமதி வழங்கினர் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள்.
ஆனால் இதனை உடனடியாகப் பெற்றுக் கொள்ளமுடியாது என்றும், மேலிட அனுமதி பெற்ற பிறகு பெற்றுக் கொள்வதாகவும் போலீசார் தெரிவித்துவிட்டனர்.
மோகனகிருஷ்ணனால் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நேற்று நடந்தது.
சங்கத்தின் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், குழந்தைகளின் படத்துக்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
கொலையாளி மோகன்ராஜை என்கவுன்டரில் கொன்ற போலீசாருக்கு பரிசாக, அனைத்து வியாபாரிகளின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, பொள்ளாச்சி டி.எஸ்.பி., முத்தழகிடம் வழங்கினர்.
ஆனால், 'இரண்டு நாட்களுக்கு பின் வாங்கி கொள்கிறேன்' என, டி.எஸ்.பி., தெரிவித்ததால், திரும்பி வந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாழ்த்துக்கள் வேண்டாமே! - சைலேந்திர பாபு:
மோகனகிருஷ்ணனை, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்ற மாநகர போலீசார் மற்றும் கமிஷனர் சைலேந்திர பாபுவைப் பாராட்டி கோவை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நகரெங்கும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
வாழ்த்து தெரிவிக்க வருவோரை கமிஷனர் சைலேந்திர பாபு தவிர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'என்கவுன்டர்' நடவடிக்கை தவிர்க்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட ஒன்று. சட்டப்படியான, தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கை. எனவே வாழ்த்துக் கூற வேண்டாம்' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications