ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்-மணி சங்கர அய்யர்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஊழல் தொடர்பாக பிரதமருக்கு அனைத்தும் தெரியும். எனவே அவர் சரியான முடிவையே எடுப்பார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்கூறுகையில்,இதுதான் நடந்தது என்று அறுதியிட்டுக் கூற விரும்பவில்லை. ஆனால் என்ன நடந்தது என்பது பிரதமருக்குத் தெரியும் என்று கருதுகிறேன். அவர் ஒரு நேர்மையான தலைவர். எனவே சரியான முடிவுக்கு அவர் வருவார் எனக் கருதுகிறேன்.
முதலில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிஏஜி அறிக்கையை கவனத்தில் கொள்வதும் அவசியம்.
அதேசமயத்தில், டிராய் விதித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகள் நிஜமானவை, எழுத்துப்பூர்வமானவை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்தப் பரிந்துரைகளை அமைச்சர் ராஜாவும் ஏற்றுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆனால் டிராய் ஏன் தவறான பரிந்துரைகளைக் கொடுத்தது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும், இந்த அடிப்படைத் தவறை டிராய் ஏன் செய்தது என்பதையும் விசாரித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார் அய்யர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications