திராவிட விழிப்புணர்ச்சி கழகம் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என பெயர் மாற்றம்
மதுரை: திராவிட விழிப்புணர்ச்சி கழகம் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் மதுரையில் நடந்தது. அதில் இன்று முதல் கட்சியின் பெயர் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என மாற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கட்சியின் பெயரோடு, கட்சிக் கொடியும் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொடி மஞ்சள் நிறத்தில் மஞ்சள் நிறப் புலி உருவம் கொண்டதாக உள்ளது. கட்சியின் அவைத்தலைவராக ராஜபாண்டியனும், பொருளாளராக கருப்பையாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 மாவட்டங்களின் செயலாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக வக்கீல் செந்தில், புறநகர் மாவட்ட செயலாளராக நல்லமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக பூமிநாததேவர், விருதுநகர் மாவட்ட செயலாளராக சாத்தூர் பால்பாண்டியன் உள்பட 18 பேர் மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்த தேவரின மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தேவரின மக்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.
மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை உடனே சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications