திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் திருவாரூர் எஸ்.பி.-ஜெ. புகார்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மன்னார்குடி நகரம், கோபிரளயம் சாலையில் காளியம்மாள் என்ற பெண்மணி 9.6.2010 அன்று கொலைசெய்யப்பட்டது, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாமணி பகுதியில் 1.8.2010 அன்று 5 வயது சிறுமி மண்எண்ணை ஊற்றி கொளுத்தப்பட்டது, நீடாமங்கலம், கோவில் வெண்ணி அம்பேத்கர் நகரில் கோவிந்தம்மாள் என்கிற மூதாட்டி கொலை செய்யப்பட்டது உள்பட பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலை நிலவுகிறது.
இதே போன்று, மன்னார்குடி நகரத்தில் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 25.6.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, துணிக்கடை அதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை, திருவாரூர் நகரத்தில் வேளாண் துறை தோட்டக்கலை உதவி இயக்குநர் வீட்டில் 15.5.2010 அன்று நடைபெற்ற கொள்ளை, 20.7.2010 அன்று நூருல்அமீன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 19.2.2010 அன்று ரவிச்சந்திரன் என்பவரிடம் அடிக்கப்பட்ட கொள்ளை, 7.8.2010 அன்று நன்னிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியில் ஜெயந்தி என்பவருடைய செயின் அறுப்பு, மூங்கில்குடி முத்து அனிதாவின் செயின் அறுப்பு என பல கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளிலும் குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மாறாக, திருவாரூர் மாவட்டத்தைச்சேர்ந்த கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுவது, போன்ற வேலைகளில் திருவாரூர் மாவட்டக் காவல் துறை ஈடுபட்டு வருவதாகவும், காரைக்காலில் இருந்து திருவாரூக்கு கள்ளச்சாராயம் கடத்துவதற்கு உறுதுணையாக காவல் துறை இருப்பதாகவும், திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தி.மு.க. மாவட்டச் செயலாளரைப் போல் செயல்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதை கண்டித்து திருவாரூர் மாவட்டக்கழகத்தின் சார்பில், 15 ந் தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், மன்னார்குடி நகரம், மேல ராஜ வீதி, பெரியார் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக வக்கீல்கள் பிரிவுச் செயலாளர் பி.எச். மனோஜ் பாண்டியன், எம்.பி., தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகச்செயலாளர் காமராஜ் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications