கண்டெய்னர் லாரிகள் ஸ்ட்ரைக்.. சென்னை துறைமுகப் பணிகள் ஸ்தம்பிப்பு!
சென்னை: கார் டிரைவர் - கண்டெய்னர் டிரைவர் இடையே நடந்த மோதல் காரணமாக கண்டெய்னர் லாரிகள் திடீர் ஸ்ட்ரைக்கில் குதித்தனர்.
இதனால் சென்னை துறைமுகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூரை சேர்ந்தவர் சேகர். கண்டெய்னர் லாரி டிரைவர். இவர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த போது, பின்னால் வேகமாக வந்த காருக்கு வழிவிடவில்லையாம். கே.வி. குப்பம் அருகே கண்டெய்னர் லாரியை கார் முந்தியது.
லாரியை மடக்கும் விதத்தில் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர் இரும்பு கம்பியால் டிரைவர் சேகரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து சேகர் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் பொறுமை இழந்த டிரைவர்கள் நேற்று முதல் லாரியை ஓட்டாமல் ரோட்டு ஓரம் வரிசையாக நிறுத்திவிட்டனர். துறைமுகத்தில் இருந்து வெளியே வந்த லாரிகளும் ஆங்காங்கே நின்று விட்டன.
துறைமுக நிர்வாகத்தினரும் பேலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதை கண்டெய்னர் டிரைவர்கள் ஏற்கவில்லை. தாக்கிய கும்பலை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து விட்டனர்.
இதனால் துறைமுகத்துக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் எண்ணூர் விரைவு சாலையில் நிறுத்தப்பட்டன. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
துறைமுகத்தில் அன்றாட ஏற்றுமதி இறக்குமதி பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நவம்பர் 22-ம் தேதி இன்னொரு ஸ்ட்ரைக்!
இந்த நிலையில் துறைமுகம் - எண்ணூர் ரோடு சரியில்லாததால் வருகிற 22-ந்தேதி கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் நடத்த உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications