சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு : அமைச்சர் கீதா ஜீவன்
நெல்லை: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை அரசு துறைகளில் பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
நெல்லையில் நடந்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிய மாநாட்டில் சமூக நலம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், "எதிர்கால சந்ததிகளை பராமரிக்கும் பணியை அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது சிரமங்களை உணர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சத்துணவு துறைக்கு ரூ.227 கோடி நிதி ஒதுதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.1238 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு கடந்த 2005-06 ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 4 மடங்கு அதிகமாக 2010-2011ல் ரூ.2754 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சமூக நலத்துறை உள்பட 4 துறைகளில் பதிவுத்துறை எழுத்தர், உதவியாளர்கள், கண்காணிப்பாளர் நிலை 2 பதவிகளில் தகுதியுள்ளவர்களை பணியமர்த்த சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உத்தரவு இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இதே போன்று பி.எட். படித்துவிட்டு சத்துணவு, அங்கான்வாடி துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும் பொருட்டு இம்மாத இறுதியில் சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது 10 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பொது வருங்கால நிதி திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications