இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் - உருத்திரகுமாரன் அறிவிப்பு !
மதுரை : இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
அது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின் போது,
இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கான தேர்தலை இந்தியாவிலும் நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை நடத்ததுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் .
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெளியை நிரப்பபும் முயற்சியே நாடுகடந்த தமிழீழ அரசு எனவும் அதன் பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் சனநாயகத்தின் பண்பியல்புகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
எனினும் எமது பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகளாக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
தற்போது தமிழர்களை தாயகத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது வேறு அமைப்புகளுடனோ வெளிப்படையான உறவுநிலையை பேண முடியாது.
எனினும் தாயகத்தில் உள்ளவர்களினதும் புலத்தில் உள்ளவர்களினதும் இலக்கு ஒன்றாக இருக்கும்போது தனித்தனியாகவே அந்த இலக்கை நோக்கி நகரமுடியும், என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications