மோகனகிருஷ்ணன் என்கௌண்டர்: கமிஷனர் டிசம்பர் 6-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கோவையில் மோகனகிருஷ்ணன் என்கெளன்டர் குறித்த முழு விவரங்களையும் டிசம்பர் 6ம் தேதி சமர்ப்பிக்குமாறு கோவை காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் அக்கா, தம்பியான பள்ளிச் சிறார்களைக் கடத்திச் சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த மோகனகிருஷ்ணனை போலீஸார் கடந்த 9-ம் தேதி என்கௌண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்று கூறி சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா ஆஜராகி வாதாடினார்.
ராதாகிருஷ்ணன் கோவை காவல் துறை அதிகாரிகள் தங்கள் காவலில் இருந்த ஒரு கைதியைச் சுட்டுக் கொன்றதன் மூலம் சட்டத்தை மீறியுள்ளனர். இது நீதித்துறைக்கே விடுக்கப்பட்ட சவாலாகும் என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கோவை போலீஸ் கமிஷனர் வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications