காமன்வெல்த் போட்டி ஊழல்-கல்மாடிக்கு நெருக்கமான இருவர் கைது
Subscribe to Oneindia Tamil

கைது செய்யப்பட்ட டி.எஸ். தர்பாரி, சஞ்சய் மகேந்திரூ ஆகிய இருவரும் சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய கூட்டாளிகள் ஆவர். இருவரும் திங்கள்கிழமையன்று அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். க்வீன்ஸ் பேட்டன் ரேலி தொடர்பான ஊழலில் இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
தர்பாரியும், மகேந்திரூவும், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு இணை இயக்குநர்களாக இருந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தவிர லண்டனைச் சேர்ந்த ஏஎம் பிலிம்ஸ், ஏஎம் கார் ஆகிய இரு நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications