கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத் துறை-பிரதமர் அதிரடி-திமுக அதிர்ச்சி

தொலைத் தொடர்புத்துறை திமுக வசமே இருக்கும் என்று அக் கடசியின் மூத்த எம்பியான டி.ஆர்.பாலு இன்று காலை கூறியிருந்த நிலையில், தற்போது திமுக அமைச்சர்கள் யாரிடமும் கூடுதல் பொறுப்பை கொடுக்காமல் கபில் சிபலிடம் கொடுத்து விட்டார் பிரதமர்.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராசா வகித்த பதவிக்கு அடுத்து யார் புதிய அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. பிரதமரே கூடுதலாக அந்த பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் கபில் சிபல் கூடுதலாக தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பிருத்விராஜ் சவான் மகாராஷ்டிர முதல்வராக நியமிக்கப்பட்டதால், அவர் வசம் இருந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறையையும் சிபலே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, பிருத்விராஜ் சவான் வசம் இருந்த இன்னொரு துறையான பெர்சனல் மற்றும் பயிற்சித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கே கிடைக்கும்-பாலு நம்பிக்கை
முன்னதாக இதுகுறித்து டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திமுகவசம் இருந்தது தொலைத் தொடர்புத்துறை. தற்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருவதால், கட்சி மேலிட உத்தரவுப்படி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த அமைச்சர் யார் என்பதை முதல்வர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார்.
பாலு வீட்டில் அவசரக் கூட்டம்:
இந்த நிலையில் டி.ஆர்.பாலுவின் டெல்லி வீட்டில் இன்று திமுக எம்.பிக்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா ராஜினாமா ஏற்பு:
இதற்கிடையே, அமைச்சர் ராஜாவின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications