ஊழலுக்கு எதிராக விரைவில் கடும் நடவடிக்கை: ராகுல்

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi
அமேதி: ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் விரைவில் மேலும் கடுமையாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது தொகுதியான அமேதியில் சுற்றுப் பயணம் செய்து வரும் ராகுலிடம் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் ஆகியவை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராகுல், நாட்டில் ஊழலை ஒழிப்பது மிக மிக முக்கியமான விஷயம். இதில் மத்திய அரசு கடுமையாகவும் கவனமாகவும் அரசு செயல்படும்.

ஊழல் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் விரைவில் மேலும் கடுமையாகும் என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது. இந்த மாநிலத்தில் பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் மாநில அரசு நிறைவேற்றவில்லை. அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவி்ல்லை. சாலைகள் மிக மிக மோசமாக உள்ளன.

இந்தியாவின் எதிர்காலம் உற்பத்தித்துறையை சார்ந்தே இருக்கும் என்பது என் கருத்து. ஐடி உள்ளிட்ட சேவைத் துறைகளும் மிக முக்கியம் என்றாலும விவசாயம் உள்ளிட்ட உற்பத்தித் துறைகள் தான் நாட்டை தன்னிறைவாக்குவதோடு ஸ்திரமான வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்றார்.

மருத்துவமனையில் பல்லுக்கு சிகிச்சை பெற்ற ராகுல்:

இந் நிலையில் ராகுல்காந்தி இன்று திடீரென அமேதியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் பல் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+