சீமானை பாதுகாப்பு சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கு-இறுதி விசாரணை தேதி அறிவிப்பு
சென்னை: திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த வழக்கில் இறுதி விசாரணைக்கான தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி சென்னையில் இலங்கை கடற்பைடயினர் தமிழ மீனவர்களைத் தாக்கி,சுட்டுக் கொன்று வருவதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார். அப்போது தமிழர்களைக் கொல்லும் சிங்களர்களை எச்சரித்துப் பேசினார்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் போட்டது போலீஸ். மேலும் ஜூலை 12ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீது பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டமும் பிரயோகிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சீமானின் சகோதரரான ஜேம்ஸ் பீட்டர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்ந்து இழுபறியாக உள்ளது.
இந்த நிலையில், நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், சி.எஸ்.கர்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வக்கீல் என்.சந்திரசேகரன், மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வருகிற 25ம் தேதி இந்த மனு இறுதியாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications