69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய ட்ராய் பரிந்துரை... மவுனம் சாதிக்கும் கபில் சிபல்!
டெல்லி: ஏர்செல், யூனிநார், விடியோகான், எடிஸ்சாலட் (ஸ்வான்) உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 69 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருக்கிறது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 2008-09-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு உரிமங்களை டிராய் ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில் 5 முக்கிய நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்திருக்கிறது. அதில் யூனிநார் நிறுவனத்தின் 8 உரிமங்களும் ஏர்செல் நிறுவனத்தின் 5 உரிமங்களும் அடக்கம் எனத் தெரிய வந்திருக்கிறது.
ஒப்பந்தத்திலுள்ள விதிமுறைப்படி சேவைகளைத் துவக்காததும், உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாதவை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இவற்றில் சில நிறுவனங்கள் அதிகபட்ச உரிமம் பெற பொய்யான முகவரி்கள், தகவல்களை அளித்துள்ளன. இவற்றை குறைந்தபட்சம் ஆராயாமலேயே இந்த உரிமங்களை வழங்கியுள்ளார் ராஜா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த உரிமங்களை உடனடியாக ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.
ஆனால் ட்ராயின் இந்தப் பரிந்துரைக்கு இன்னும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை துறையின் புதிய அமைச்சர் கபில் சிபல். நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதுவும் பெரும் பிரச்சினைகளைக் கிளப்பும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications