ரம்லத் தற்கொலை முயற்சி?

Subscribe to Oneindia Tamil

Ramlath
சென்னை: நயன்தாராவுடன் தன் கணவர் பிரபுதேவாவின் கள்ளக் காதல் இன்னும் தொடர்வதால் உண்டான மன அழுத்தத்தில் மனைவி ரம்லத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

பிரபுதேவா மனைவி ரம்லத் அண்ணா நகரில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறார். அங்கு நேற்று அதிக தூக்க மாத்திரை சாப்பிட்டு திடீரென மயங்கி விழுந்தார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிந்ததும் விரைந்து சென்று மருத்துவமனைக்கு தூக்கி போய் காப்பாற்றியுள்ளனர்.

பிரபுதேவா, நயன்தாரா மீது குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்லத் வழக்கு தொடர்ந்துள்ளார். கணவனை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றும் நயன்தாரா அவரை வர விடாமல் தடுத்து வைத்துள்ளதாகவும் தனது மனுவில் அவர் குற்றிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஆஜராகுமாறு பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் ரம்லத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ரம்லத் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக நெருக்கமானவர்கள் கூறினர்.

பிரபுதேவா இரு மாதங்களாக ரம்லத்தையும், குழந்தைகளையும் பார்க்க வீட்டுக்கு வரவில்லை. கோர்ட்டுக்கு போனதில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் அனுப்புவதையும் நிறுத்தி விட்டார். குழந்தையின் பிறந்த நாள் சமீபத்தில் நடந்த போது வருவார் என எதிர்பார்த்தார். ஆனால் பிரபுதேவா போனில் கூட பேசவில்லையாம்.

கடந்த ஒரு வாரமாக பிரபு தேவா சென்னையில்தான் இருந்தார். ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கும் 'எங்கேயும் காதல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதற்காக அங்கு முகாமிட்டு இருந்தார்.

இதுபற்றிய தகவல் ரம்லத்துக்கு தெரிய வந்தது. தன்னுடன் பேசுவார், சமரச முயற்சியில் ஈடுபடுவார் என கருதினார். ஆனால் அவர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் மனமுடைந்துபோனார் ரமலத்.

இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நயன்தாரா தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக பிரபுதேவா படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இனி தன்னோடு சேர மாட்டார்.
நயன்தாராவை திருமணம் செய்வதிலும் பிடிவாதமாக இருக்கிறார், என்பது ரம்லத்துக்கு உறுதியாக தெரிந்ததுவிட்டது.

அதே நேரம், ரம்லத் சட்டப்பூர்வ மனைவி அல்ல என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் வாதாடவும் பிரபுதேவா முடிவு செய்துள்ளது அவர் காதுக்கு வந்தது. பதிவு செய்யாத திருமணம் என்பதால் ரம்லத் மனைவியே அல்ல என்று வாதிடப் போவதாகவும் பிரபுதேவா தரப்பில் முடிவு செய்திருந்தனர்.

பிரபுதேவாவின் இத்தகைய நடவடிக்கைகள் ரம்லத்தை தற்கொலைக்கு தூண்டியதாக இணைய தளங்களில் பரவியுள்ளது.

ஆனால் இச்செய்தியை ரம்லத் வக்கீல் ஆனந்தன் மறுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+