டிச 5-ம் தேதி தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஸ்ட்ரைக்!

இது குறித்து தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு சங்க தலைவர் ஆர்.சுகுமார், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தமிழ்நாடு லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் நல்லதம்பி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிப்பதில் சட்ட விதிகள் மீறப்படுகிறது. முறைகேடுகள் நடக்கின்றன.
சுங்க வரி வசூலிப்பதில் தனியார் துறையின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சுங்க வரி வசூலிப்பதில் 1997-ல் இருந்த விதிமுறைகள் இருக்கவேண்டும். 2008-ல் அமல்படுத்திய விதிமுறைகள் இருக்கக் கூடாது. சுங்கவரி மிக மிக அதிகமாக உள்ளது.
சுங்க வரி வசூலிக்கும் இடங்களில் லாரி டிரைவர்களுக்கு கழிவறைகள் இருக்கவேண்டும். ஓய்வு எடுக்க இடம் இருக்கவேண்டும். முதலுதவி சிகிச்சைக்கு தயாராக இருக்கவேண்டும். ஆனால் அந்த வசதிகள் எதுவும் இல்லை.
எனவே இப்படிப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அளவில் டிசம்பர் 5-ந் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சம் லாரிகள் உள்ளன. இவை அனைத்தும் ஓடாது.
25-ந் தேதிக்குள் மத்திய அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி. இதில் மாற்றுக்கருத்து இல்லை..." என்றனர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications