ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயார்-மொய்லி
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதத்திற்கு அரசு தயார்.
ஆனால் எதிர்க்கட்சிகள்தான் கல்லை வீசி விட்டு ஓடும் உத்தியை கடைப்பிடித்து வருகின்றன. நாடாளுமன்றத்தை தேவையில்லாமல் முடக்கி வைத்து ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கின்றன.
எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்கக் கூடிய வகையிலான பிரதமர் இங்கு உள்ளார். எனவே நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கூட்டு நாடாளுமன்றக் குழுவை விட நாடாளுமன்றம்தான் உயரிய அமைப்பு. இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மொய்லி.












Click it and Unblock the Notifications