இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு-டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நெல்லை: மதுரை இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கடந்த 1994-ம் ஆண்டு இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை திலகர்திடல் போலீசார் தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜாகீர் உசேன், அப்துல் அஜீஸ், ராஜா உசேன், சுபைதார், சீனி நயினாமுகமது, சாகுல் அமீது ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கி்ல் தொடர்புடைய அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சீனிநயினா முகமது மட்டும் ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார். இந்த தடா வழக்கு நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தடா சட்டத்தின் கீழ் தங்களை கைது செய்தது தவறு, தடா சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு அச்சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வருவதை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 6 மாதத்திற்கு முன் தடா கைதி சாகுல் அமீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 10-ம் தேதி நீதிபதி சுகுணா முன்னியில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தடா வழக்கு நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய கைதி சுபைதார் தவிர மற்ற தடா கைதிகள் அனைவரும் நீதிபதி விஜயராகவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications