அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் கூற முடியாது-காங்.
டெல்லி: அரசு என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்று கூறும் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷகீல் அகமது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த நாட்டை ஆளும் அதிகாரத்தை மக்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்குக் கொடுத்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் குறுக்கிட முடியாது.
எதிர்க்கட்சிகளுக்கு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உண்டு. மக்களின் பிரச்சினைகளை அவர்கள் தாராளமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். ஆனால் அரசு என்ன செய்ய வேண்டும் என்று அரசை வற்புறுத்தும் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. அந்த அதிகாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தரவில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்தொடர்பாக அரசு என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளதோ அதுவே காங்கிரஸின் நிலையும் கூட. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு புரிய வைக்க அரசு முயன்றது, ஆனால் அது கை கூடவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications