பிப்ரவரி மாதம் தமிழக மேலவைத் தேர்தல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மேல்சபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
78 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் பட்டதாரி தொகுதிகளில் இருந்து 7 உறுப்பினர்களும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 7 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்காக பட்டதாரி தொகுதிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 29ம் தேதி வெளியிடப்படுகிறது.
மேலும் வரும் பிப்ரவரி மாதத்தில் மேல்சபை தேர்தலை நடத்தவும் தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
பட்டதாரி, ஆசிரியர்கள் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 14 பேர் தவிர உள்ளாட்சி மன்ற தொகுதிகளில் இருந்து 26 உறுப்பினர்களும், சட்டசபை தொகுதியில் இருந்து 26 உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 உறுப்பினர்களை நியமன முறையில் மேல்சபை உறுப்பினர்களாக கவர்னர் நியமிப்பார்.
சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவோரை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்யவர். 26 உறுப்பினர்கள் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் 9 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தால் மேல்சபைக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும்.
உள்ளாட்சி தொகுதிகளை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி மன்றத்தலைவர்கள் வாக்களித்து மேலவை உறுப்பினரைத் தேர்வு செய்வர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் மேலவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications