நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை: பிசான பருவ நெல் சாகுபடி தீவிரம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது பலத்த மழை பெய்யத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 45 மிமீ, ஆய்குடியில் 40.6 மிமீ, சேரன்மகாதேவியில் 4, பாளையங்கோட்டையில் 33.4, ராதாபுரத்தில் 6, சங்கரன்கோவிலில் 35, செங்கோட்டையில் 42, சிவகிரியில் 31, தென்காசியில் 41.4, நெல்லையில் 32, ஆலங்குளத்தில் 57.2 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்திருந்தனர். தற்போது மழை பெய்துள்ளதை அடுத்து விவசாயிகள் நாற்றங்காலில் இருந்த நெல்நாற்றுகளை விவசாய நிலங்களில் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications