ஊழல் புரிந்த எதியூரப்பா மீது பாஜக எடுத்த நடவடிக்கை என்ன? சோனியா கடும் தாக்கு

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து இன்று செய்தியாளர்கள் சோனியாவிடம் கருத்து கேட்டபோது, முதல்வர் நிதீஷ்குமார் பெற்ற வெற்றிக்காக அவரைப் பாராட்டுகிறேன் என்றார் சோனியா.
பின்னர் அவராகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ளும் முறை குறித்தும், எதியூரப்பா விவகாரம் குறித்தும் காட்டமாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஊழல் புகார்கள் குறித்து காங்கிரஸ் கட்சி உறுதியான, திடமான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்த யார் மீதாவது புகார் எழுந்தால் உடனடியாகநடவடிக்கை எடுத்துள்ளோம்.
முன்பு சசிதரூர் மீது புகார் வந்தபோது அவரை விலகச் சொன்னோம். அதேபோல மகாராஷ்டிர முதல்வர் மீது புகார் வந்தபோது அவரும் விலகினார். ஆனால் கர்நாடக முதல்வர் மீது ஊழல் புகார் வந்து இத்தனை நாட்களாகி விட்டபோதிலும், இதுவரை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் அறிய விரும்புகிறேன்.
நாங்கள் எடுத்த நடவடிக்கையையும், அந்தக் கட்சி (பாஜக) எடுத்த நடவடிக்கையையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கட்டும். எங்களது நடவடிக்கைக்கே பாராட்டு கிடைக்கும்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. பிரதமருக்கு இந்த விவகாரத்தில் 100 சதவீதம் தொடர்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும், பிரதமர் போன்ற அப்பழுக்கற்ற ஒரு தலைவரை எதிர்க்கட்சியினர் நடத்தும் விதம் மிகவும் வருத்தத்திற்குரியது.
கடந்த 2004ம் ஆண்டு முதலே பிரதமரை அவமானப்படுத்த வேண்டும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தீவிரமாக உள்ளனர். 2004 தேர்தலில் பிரசாரத்தின்போது பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதையே பிரதான கோஷமாக முன்வைத்தனர். அவரை திறமையற்றவர் என்றனர். ஆனால் நடந்தது என்ன?. அவர்கள் தோல்வி அடைந்தனர், பிரதமர் வெற்றி பெற்றார் என்றார் சோனியா காந்தி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications