அறந்தாங்கி நீதிபதி வீட்டில் பணம் நகை கொள்ளை: போலீசார் வலை வீச்சு
அறந்தாங்கி: அறந்தாங்கியில் நீதிபதி வெளியூர் சென்ற சமயத்தில் அவரது வீட்டு பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் வேலுச்சாமி. இவர் புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன் பழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2000 ரொக்கம், ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிச் சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications