ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணை 30ம் தேதி ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி கோடிக்கணக்கில் சொத்து குவித்த வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரி்க்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
அந்த மொழி பெயர்ப்பில் பிழைகள் அதிகமாக இருப்பதாகவும், எனவே அந்த ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகளை மட்டும் திருத்திக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் இந்த வழக்கில் சாட்சிகள் மறு விசாரணை தனி நீதிமன்றத்தில் நேற்று தொடங்க இருந்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம் இன்னும் கிடைக்காததால் வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications