இலங்கையில் எஸ்.எம். கிருஷ்ணா: யாழ்ப்பாணம் செல்கிறார்

4 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்ற கிருஷ்ணா விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையில் போர் முடிந்தபோது 3 லட்சம் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இடம் பெயர்ந்து பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 17,000 முதல் 20,000 ஆகக் குறைந்துள்ளது. இவர்களையும் விரைவில் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்று இலங்கையிடம் கோருவேன்.
தமிழர்களுக்காக இந்தியா 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறது. இதில் 1,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகளையும் நேரில்
பார்வையிட இருக்கிறேன்.
இலங்கையில் தண்டவாளங்கள், துறைமுகங்கள் அமைக்கும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ளும். இந்திய தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் நாடாகவும் இப்போது இலங்கை மாறியுள்ளது என்றார்.
கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணாவை வரவேற்றனர். அங்கு நிருபர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், குறிப்பாக தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வை அமலாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆயுதப் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ளது. இனி நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
எனது இந்தப் பயணம் அதிகாரப் பகிர்வு பேச்சுகளுக்கு தொடக்கமாக அமையும். கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த ராஜபக்சே, அதிகாரப் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அதே போல போரினால் இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் இந்த ஆண்டுக்குள் தங்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இந்தியாவிடம் இலங்கை உறுதியளித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
ராஜபக்சே, அமைச்சர்கள், அதிகாரிகளை கிருஷ்ணா சந்தித்துப் பேசவுள்ளார். அதே போல இலங்கைத் தமிழ் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கும் கிருஷ்ணா செல்ல இருக்கிறார். 1989ம் ஆண்டில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் தான், கடைசியாக யாழ்ப்பாணம் சென்ற இந்தியத் தலைவராவார். அதற்குப் பின் இப்போது கிருஷ்ணா தான் அங்கு செல்கிறார்.
இலங்கையின் வளர்ச்சிப் பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா ரூ. 7,990 கோடி நிதி வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கடன் மற்றும் உதவி ஆகியவை அடங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications