தூத்துக்குடி மாநகராட்சியின் மெத்தனத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அண்ணாநகர், பிரையன்ட் நகர், வி.ஈ.ரோடு, பாலவிநாயகர் கோவில்தெரு, சண்முகபுரம், கேவிகே நகர், ஜார்ஜ் ரோடு, டபுள்யூஜிசி ரோடு உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை நீரும், கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டுக் கலைந்து சென்றனர்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications