தமிழக இளைஞர் காங் பாதயாத்திரை-ராகுல் காந்தி அதிருப்தி?
டெல்லி: கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் குறையை காங்கிரசார் தீர்க்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் களியக்காவிளையில் இருந்து சென்னை வரை தமிழக இளைஞர் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர். கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கிய பாத யாத்திரை நவம்பர் 24ம் தேதி நிறைவடைந்தது.
இவர்கள் தங்கள் சாதனைகளை எடுத்துச் சொன்னதை விட திமுக மீது தாக்குதல் நடத்தியதே மிக அதிகம். மேலும் காங்கிரசின் வழக்கமான கோஷ்டி பூசலும் ஆங்காங்கே தலைகாட்டி மக்களிடையே அவர்களது நிஜ முகத்தைக் காட்டியது.
இந் நிலையில் இந்த பாதயாத்திரையின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வரவில்லை. காரணம், அந்த பாத யாத்திரையில் ராகுலுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மற்றும் நிர்வாகிகள் டெல்லியில் ராகுல் காந்தியை நேற்று சந்தித்தனர்.
அப்போது பாத யாத்திரையின் தொகுப்பு ராகுலிடம் கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்த அவர் பாத யாத்திரை சென்றதில் மகிழ்ச்சி. ஆனால் எதிர்பார்த்தபடி மக்களிடம் அதற்கு பலனில்லை.
தொடர்ந்து கிராமங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க பாடுபடுங்கள். கிராமங்களில் அதிக அளவில் கூட்டம் நடத்தி மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
பின்னர் ராகுலுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய கட்சியினரிடம் அவர் நீங்கள் முதலில் சேவை செய்து பெரிய நிலைக்கு வாருங்கள், பிறகு நானே வந்து உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம்.
இந் நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளே பாத யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.
அப்போது கிராமப் பகுதிகளில் அதிக அளவி்ல் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளனராம். மேலும் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வினியோகிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications