மதுரைப் பகுதி நக்சல் தலைவர் உடுப்பியில் கைது
உடுப்பி: போலீசாரால் தேடப்பட்டு வந்த தமிழக நக்சலைட் தலைவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீசாரல் தேடப்பட்டு வந்த நக்சலைட்டான சேகர் என்ற ரஞ்சித் என்ற ரவி என்ற பிரேம் புதன்கிழமை நக்சலைட் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
குந்தாபூர் தாலுகா யெட்மோகா கிராமத்தில் பசவன்பலு வனப்பகுதியில் அவர் பிடிபட்டார்.
இவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் இயக்கத்தின் மதுரைப் பகுதி தலைவர் ஆவார். 2 வழக்குகளில் தொடர்புடைய அவரை தமிழக போலீசார் தேடி வந்தனர். அவரது தலைக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை போலீசார் கையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தார். தற்போது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 5 ஜெலடின் குச்சிகள், 10 டெட்னேடர்கள், மாவோயி்சம் தொடர்பான சில புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேகர் குந்தபூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications