ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு ஏதாவது தகுதி உண்டா-பிரணாப் கேள்வி
டெல்லி: தெஹல்கா ஊழலில் சிக்கிய பாஜகவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்க கொஞ்சம் கூட தகுதி கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், பாஜக ஆட்சியில் தெஹல்கா விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து விடவில்லை. அந்தக் கட்சியின் தலைவரே பணத்தை வாங்குவதை வீடியோவில் பார்த்தோம். ஸ்பெக்ட்ரம் பற்றி பேசுவதாக இருந்தால், அந்த ஊழலைப் பற்றியும் பாஜக பேச வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விசாரணையை பத்திரிகைகளே நடத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் முதல் நாளில் இருந்தே விசாரணையை நாங்கள் தொடங்கி விட்டோம். காமன்வெல்த் விளையாட்டு முடிந்த உடனேயே விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது.
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை கிடைத்த உடனேயே, சம்பந்தப்பட்ட அமைச்சர் ராசாவும் ராஜினாமா செய்துவி்ட்டார். அவர் ஊழல் செய்தாரா, இல்லையா என்பது உறுதியாகாமலேயே இது நடந்துவிட்டது. அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications