அதிமுக பிமுகர் மகள் மர்ம மரணம்-மறு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூர்: அதிமுக பிமுகர் மகள் மர்ம மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது பூச்சிக்காடு. இப்பகுதியைச் சேர்ந்தவர் வடமலைபாண்டியன். இவர் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளராக உள்ளார்.
இவர் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 4.9.2010 அன்று நான் சென்னையிலிருந்து காரில் எனது மனைவி மற்றும் மகள் சூரியதேவியுடன் ஊருக்கு வந்து கொண்டிருந்தேன். எனது காரை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
கார், எப்போதும்வென்றான் அருகே வரும் போது திடீரென விபத்துக்குள்ளானதில் மகள் சூரியதேவி இறந்தார். நானும், மனைவியும் காயத்துடன் உயிர் தப்பினோம்.
எனது காரின் பின்னால் சந்தேகப்படும்படியாக 2 லாரிகள் பின் தொடர்ந்து வந்தது பின்பு வாசரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து எப்போதும்வென்றான் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்பதால், இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில், விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி எஸ்.பி., எப்போதும் வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் இது குறி்த்து பதில் மனு தாக்கல் செய்யவும், மறு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications