இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை வேறு யாரும் பயன்படுத்த ஐகோர்ட் தடை
நெல்லை: இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தவிர வேறு எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லீம் அமைப்புகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் தவ்ஹீத் ஜமாத் பெயர் பதிவில் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இனி அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன் இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அமைப்பினரும் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்ட தலைவர் யூசுப் அலி, செயலாளர் சாதீக் மற்றும் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர். அதில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இந்திய தவ்ஹீத் ஜமாத் பெயரை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications