கொடூரமாக சிதைக்கப்பட்ட பெண் புலி... வெளியானது இன்னுமொரு போர்க்குற்ற வீடியோ!
லண்டன்: மேலும் ஒரு அதிர்ச்சி தரத்தக்க இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற வீடியோவை வெளியிட்டுள்ளது சேனல் 4 தொலைக்காட்சி.
கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின்போது, அந்நாட்டு ராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைப் பற்றிய வீடியோ காட்சிகளை சானல் 4 என்ற லண்டன் தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியது.
மிகவும் கொடூரமாக உள்ள அந்த வீடியோ காட்சிகள் இலங்கை ராணுவத்தினர் நடத்திய போர்க்குற்றங்களை அப்பட்டமாக எடுத்துக் காட்டி, சர்வதேச சமூகத்தை அதிரவைத்தது.
ஆனால், அந்த வீடியோ போலியானது என இலங்கை அரசு கூறியது. அது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில். சமீபத்தில் இசைப்பிரியா என்ற புலிகளின் கலைப்பிரிவைச் சேர்ந்த இளம்பெண்ணை கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றதன் வீடியோவையும் சேனல் 4 வெளியிட்டது.
இந்நிலையில், மீண்டும் ஓரு போர்க் குற்ற வீடியோவை சேனல் 4 வெளியிட்டுள்ளது. ராணுவத்திடம் பிடிபட்டு கைகள் இரண்டும் பின் பக்கம் கட்டப்பட்டு வீடியோவில் தோன்றும் பெண் விடுதலைப்புலியை மிகக் கொடூரமாக சிதைத்துக் கொன்றுள்ளனர் ராணுவத்திநர்.
அந்த பெண் விடுதலைப் புலியின் இயற்பெயர் உஷாநந்தினி (வயது 19.). விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த பின்பு அவரது பெயர் மதுநிலா என மாற்றப்பட்டது. மது என எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
மன்னார் ஆலம்குடா பகுதியில் கடந்த 2009 ஜனவரி மாத இறுதியில் நடந்த போரின் போது ராணுவத்தினரிடம் மதுநிலா பிடிபட்டார். இவருடைய உறுப்பினர் எண் 1023.
இந்த வீடியோவும் ஐநா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications