ஜேபிசி விசாரணைக்கு காங். முடிவு?-கூட்டணிக் கட்சிகளுடன் இன்று அவசர ஆலோசனை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் சம்மதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வீட்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கடந்த 17 நாட்களாக ஸ்தம்பித்துப் போயுள்ள நாடாளுமன்றத்தை உயிர்ப்பித்து கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை கண்டிப்பாக தேவை. இதைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்க மாட்டோம் எஎன்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக கூறி விட்டன.
ஜேபிசி விசாரணைக்கு மமதா பானர்ஜி, சரத் பவார் போன்றோர் ஆதரவாக உள்ளனர். அதேசமயம், திமுக இதை இதுவரை ஏற்கவில்லை. அதேசமயம், காங்கிரஸ் கூட்டணியில் பெரும்பாலானோர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினால் திமுகவும் சம்மதிக்கும் என்ற நிலையே உள்ளது.
மேற்கு வங்கத்தி்ல சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால், தான் நல்ல பிள்ளை என்பதாக காட்டிக் கொள்வதற்காக ஜேபிசி விசாரணைக்கு மமதா பானர்ஜியும் சம்மதிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய நிலையில் மமதா பானர்ஜி, முதல்வர் கருணாநிதி, சரத் பவார் ஆகியோர் சம்மதித்தால் ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸும் சம்மதிக்கும் என்று தெரிகிறது. இந்த மூன்று கட்சிகளின் சம்மதத்தையும் பெறவே இன்றைய கூட்டம் என்றும் கருதப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications