ராஜசேகர ரெட்டியால் வென்றவர்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? - ரோஜா
ஹைதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் நம்பிக்கை நட்சத்திரம். ராஜசேகர ரெட்டி சுய மரியாதை மிகுந்தவர். இதே போல் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும், சுயமரியாதைமிக்கவர். யாருக்குப் பணிந்து செல்லாதவர். காங்கிரஸ் மேலிடம் கீழ்மட்ட தலைவர்களை அடிமைபோல் நடத்துகிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவிய ஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. சட்டம்-ஒழுங்கை சீர் குலைத்து ஆந்திராவை சீரழித்ததுதான் காங்கிரசின் சாதனை.
கடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தயாரா?
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பெயரைச் சொல்லி ஆந்திர மக்களிடம் ஓட்டு கேட்க தைரியம் உள்ளதா? தற்போது மாநில, மாவட்ட, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு விலகி ஜெகன் பக்கம் வந்து விட்டார்கள்.
தேர்தலின் போது காங்கிரசுக்கு வாக்குசாவடி ஏஜெண்ட் நியமிக்க கூட இப்போது ஆளில்லை என்பதுதான் உண்மை. அடுத்த தேர்தலில் பீகாரில் ஏற்பட்ட நிலைதான் ஆந்திராவிலும் ஏற்படப் போகிறது..", என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications