இங்கிலாந்தில் விபரீதம்-மகளைக் கற்பழித்த தந்தை கைது
கேம்பிரிட்ஜ்ஷயர்: இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயரில் தனது 16 வயது மகளை ஒரு மாதமாக கற்பழித்து தாயாக்கிய கொடூரத் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணுக்கு தற்போது 19 வயதாகிறது. சம்பவம் நடந்தது 3 ஆண்டுகளுக்கு முன்பு. கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையை தனது காதலரிடம் கொடுத்து வளர்க்கக் கூறினார் அப்பெண். காதலருக்கோ பெரும் குழப்பம், இந்தக் குழந்தை எப்படிப் பிறந்தது என்று. இதுகுறித்து காதலியிடம் கேட்டபோது இது உனது குழந்தைதான். இதற்கு மேல் கேட்காதே என்று கூறி விட்டார்.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் இப்பெண் கேம்பிரிட்ஜ்ஷயர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னைப் பெற்ற தந்தையே தன்னைக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும், அதனால் பிறந்ததுதான் இந்தக் குழந்தை என்றும் புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தையே என்னைகற்பழித்து விட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இது சட்டவிரோதம், முறையற்றது என்று அவரிடம் நான் எடுத்துக்கூறியும் கேட்காமல் கற்பழித்து விட்டார்.
மேலும் இதை யாரிடமாவது சொன்னால் 1000 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார். இந்த நிலையில் நான் கர்ப்பமானேன். தந்தைக்குப் பிறந்த குழந்தை என்று வெளியில் சொன்னால் அசிங்கம் என்பதால் எனது காதலரிடம் குழந்தையைக் கொடுத்து இது உனது குழந்தை என்று கூறினேன்.
இந்த நிலையில் எனது வீட்டில் இருந்த 14 வயது சிறுமியிடம் எனது தந்தை அத்துமீறி நடக்க முயன்றது தெரியவந்து அதிர்ந்தேன். அவருக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது போலீஸை நாடியுள்ளேன் என்று அப்பெண் கூறியுள்ளார்.
தற்போது அந்த கொடூரத் தந்தை மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications