For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கேன் கருவிகள் வாங்கியதில் ஊழல்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ ரெய்ட்

By Chakra
Google Oneindia Tamil News

JIPMER
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அதன் டீன் கே.எஸ். ரெட்டியின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.

ஜிப்மர் மருத்துவமனையின் ரேடியாலஜி பிரிவிலும், மருத்துவமனை கிட்டங்கியிலும் சிபிஐ குழு நேற்று ரெய்ட் நடத்தியது. அதே நேரத்தில் ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடந்தது.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரேடியாலஜி பிரிவுக்கு எக்ஸ்ரே கருவிகள், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. கருவிகள் வாங்கியதிலும், போட்டோ பிலிம் வாங்கியதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவிற்கு புகார் வந்ததையடுத்து இந்தச் சோதனைகள் நடந்தன.

10 பேர் கொண்ட சிபிஐ குழு ரேடியாலஜி, ஸ்டோர் பிரிவுகளின் ஊழியர்களை தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர். அதே நேரத்தில் இந்தப் பிரிவுகளிலும் சோதனை நடந்தது.

இதைத் தொடர்ந்து ரேடியாலஜி துறையின் தலைவர் டாக்டர் இளங்கோவனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர்.

அதே நேரத்தில் மருத்துவ கல்லூரி டீன் ரெட்டி வீட்டிலும், சி.பி.ஐ. சோதனை நடத்தியது. காலை முதல் இரவு வரை இந்தச் சோதனைகள் நீடித்தன.

English summary
CBI conducted raid at Puducherry Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research, JIPMER. The CBI team raided Radiology department, central stores, residence of the dean, Dr K S Reddy. The raid was conducted on the basis of allegation of misappropriation of funds in the procurement of MRI scanner, CT scan, films, machines and instruments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X