தூத்துக்குடியில் வேன் மீது லாரி மோதியதில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேன் மீது லாரி மோதியதில் புதுச்சேரியை சேர்ந்த 5 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி திருப்பனம்பாக்கத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். குருசாமியான இவரது தலைமையில் பாண்டிசேரி மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு செல்ல நேற்று முன்தினம் அதிகாலை கடலூரில் இருந்து வேனி்ல் புறப்பட்டனர். வேனை பாண்டிசேரி அன்புசெட்டிபாளையத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஓட்டினார்.

அனைவரும் பிள்ளையார்பட்டி சென்றுவிட்டு திருச்செந்தூர் வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 6 மணி அளவில் வேன் தூத்துக்குடி சிப்காட் பைபாஸ் சாலையில் சென்றபோது எதிரே வந்த தண்ணீ்ர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் டிரைவர் தட்சீணாமூர்த்தி மற்றும் வைத்திஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ரமேஷ், சந்துரு, வேல் ஆகியோர் இறந்தனர். மேலும் லாரி டிரைவர் ஜெயகுட்டி, உள்பட 15 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை கலெக்டர் மகேஸ்வரன், டிஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

அமைச்சர் கார் மோதி பெண் பலி

திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான் ஸ்கார்பியா காரில் சென்று கொண்டிருந்தார்.

கார் சாத்தூர் - விருதுநகர் நான்கு வழிச் சாலையில், நடராஜா தியேட்டர் ரோடு விலக்கில் மாலை 5.50 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது,

ரோட்டை கடக்க முயன்ற, சாத்தூர் மேலக்காந்தி நகரை சேர்ந்த முனியம்மாள் (50) மீது மோதியது. முனியம்மாள் சம்பவ இடத்தில் இறந்தார். சாத்தூர் டவுன் போலீசார் டிரைவர் வர்கீஸ் அமல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+