பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி, ப.சிதம்பரத்தை தாக்க புலிகள் திட்டம்-ஐபி எச்சரிக்கை

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதியில், விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது, அந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்போது இந்தியாவில், குறிப்பாக கேரளாவில் ஒன்று கூடி வருகின்றனர் என்று இந்திய உளவுத்துறையான ஐபி மற்றும் ரா ஆகியவை சமீப காலமாக கூறி வருகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை என்று கேரள காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, ப.சிதம்பரம் ஆகியோரைப் படுகொலை செய்ய புலிகள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை ஐபி தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை வந்திருப்பது உண்மைதான் என்று தமிழக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதல்வர் கருணாநிதிக்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ப.சிதம்பரத்தின் சென்னை மற்றும் சிவகங்கை வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வரவுள்ளார். அடையாறு சுற்றுச் சூழல் பூங்காவை அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு எச்சரிக்கையை ஐபி வெளியிட்டுள்ளதால், பிரதமருக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டிஜிபி லத்திகா சரண் கூறுகையில்,
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கடுமையான முயற்சிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் டிரிப்யூனல் ஒன்று இதுதொடர்பான வழக்கை விசாரித்து, புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு சரியே என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பின்னணியில் தற்போதைய புலிகள் தாக்குதல் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications