ராசாவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் திமுக பொதுக் கூட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

Raja
சென்னை: ஸ்பெக்டரம் விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் கருத்தரங்குகள் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகப்படுத்தி, மிகைப்படுத்தி அதில் தங்களுக்கு ஆதாயம் தேடும் கூட்டம் நாட்டில் அதிகமாகிக் கொண்டே போகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து மத்திய கணக்கு தணிக்கைக் குழு எத்தனை அறிக்கைகளை தந்திருக்கிறது என்பதனையும், டான்சி நிலம் வாங்கியதிலிருந்து எவ்வளவு தொகை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்பதனையும், ஒரு முதல்வர் என்ற காரணத்தால் நீங்கள் எதையும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்ததையும் மக்கள் மறந்திருப்பார்கள் எனக் கருதிக்கொண்டு அதிமுக தலைவி, ராஜாவை குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூக்குரலிடுவது எத்தனை விந்தை?.

இந்த முரண்பாடுகளின் மொத்த உருவத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்டிடவும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மை என்ன? என்பதை மக்களுக்கு உணர்த்திடவும், தலைவர் கருணாநிதி தொடர்ந்து உடன்பிறப்பு மடல்களின் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டுவரும் உண்மை களை ஊருக்கு உரைத்திடவும், பின்வரும் இடங்களில் “ஸ்பெக்ட்ரம்- உண்மை என்ன?" என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடைபெற இருக்கின்றன.

இதுதொடர்பாக மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் திமுக விளக்கப் பொதுக் கூட்டங்களில் நடைபெறும் தேதி மற்றும் பேசுவோர் விவரம் வருமாறு:

24ம் தேதி: கரூர்- துரைமுருகன், 25ம் தேதி திருச்சி- சுப.வீரபாண்டியன், திருச்சி சிவா எம்.பி, 26ம் தேதி திருச்சி- துரைமுருகன், ஜெகத்ரட்சகன், 27ம் தேதி விருதுநகர், 28ம் தேதி -ராமநாதபுரம், 30ம் தேதி திருப்பத்தூர்- க.சுப்பு, 30ம் தேதி பல்லாவரம்- திருச்சி சிவா எம்.பி.

28ம் தேதி நாகப்பட்டினம், 30ம் தேதி புதுக்கோட்டை- டி.ஆர்.பாலு, 29ம் தேதி திருவாரூர், 30ம் தேதி கடலூர்- எஸ்.ஆர்.பாரதி, 28ம் தேதி கோவை, 29ம் தேதி திருப்பூர்- கே.பி.ராமலிங்கம் எம்.பி, 28ம் தேதி ஈரோடு, 29ம் தேதி தர்மபுரி- செல்வகணபதி எம்.பி,

29ம் தேதி கிருஷ்ணகிரி, 30ம் தேதி சேலம்- இள.புகழேந்தி, ஜனவரி 2ம் தேதி தஞ்சாவூர்- திருச்சி சிவா எம்.பி.

இந்தக் கூட்டங்களின் மூலம் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+