1008 லிங்க பூஜைக்காக திருவண்ணாமலை வரும் நித்யானந்தா!

நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கை அறையில் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூர் போலீசார் நித்யானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூர் ஆசிரமத்தில் மீண்டும் பூஜை, பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்குதல் என பிஸியாகிவிட்டார்.
ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து முயன்றனர் போலீசார். ஆனால் ரஞ்சிதாவோ அதை அலட்சியப்படுத்தி, கடைசி வரை விசாரணைக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
தற்போது, நித்யானந்தாவின் 34-வது பிறந்தநாள் விழா வருகிற 29-ந்தேதி திருவண்ணாமலையில் உள்ள அவரது ஆசிரமத்தில் நடக்கவிருக்கிறது. இதற்காக அவர் திருவண்ணாமலைக்கு வருகிறார். கிரிவலப் பாதையில் நித்யானந்தாவின் தியான பீடம் உள்ளது. அங்கு அவரது பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
அப்போது மகாவேள்வி நடத்தி 1008 லிங்கங்களுக்கு நித்யானந்தா பூஜை நடத்துகிறார். காலை 8 மணிக்கு நித்யானந்தரின் பக்தர்கள் சார்பில் 108 பால்குடம், 108 தீச்சட்டி, 108 காவடி ஊர்வலம் நடக்கிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி மேளதாளத்துடன் ஊர்வலம் வருகிறது.
விழாவில் 33 நாடுகளில் இருந்து அவரது ஆதரவாளர்கள் ஏராளமானனோர் கலந்து கொள்கிறார்கள். பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்த தியான பீடத்தில் நித்யானந்தரின் தலைமை சீடர் நித்யஞானானந்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.
செக்ஸ் புகாரில் சிக்கிய 9 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக நித்யானந்தா சொந்த ஊரான திருவண்ணாமலை வருகிறார்.












Click it and Unblock the Notifications