பெரியபட்டனம் படகு விபத்து-பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டனத்தில் கடலில் படகு மூழ்கி பலியான 15 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவியை
வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடற்கரை கிராமத்தைச்சேர்ந்த 40 பேர் மன்னார் வளைக்குடாவில் உள்ள வாளைத்தீவுக்கு சுற்றுலாவாக இரண்டு நாட்டுப்படகுகளில் சென்றனர்.
அந்த இரண்டு படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கி கவிழந்ததில் அப்படகில் பயணம் செய்தவர்களில் 10 பெண்கள், சிறுவர் சிறுமியர் 5 பேட் உட்பட மொத்தம் 15 பேர் மூழ்கி இறந்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
உயிரிழந்தவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதியுதவி வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவேரிப்பட்டனம் விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கும் உதவி
இதேபோல தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஏர்ரள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் டெம்போ டிராவலருடன் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டெம்போ டிராவலர் வாகனத்தில் பயனம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சமபவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதும் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்த செய்தி தமக்கு கிடைத்ததும் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ள முதல்வர் கருணாநிதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications