ரூ. 470 கோடி மோசடி-விசாரணைக்கு வருமாறு மோடிக்கு சென்னை போலீஸ் சம்மன்

கடந்த அக்டோபர் மாதம் சீனிவாசன் சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து மோடி ரூ. 470 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக புகார் கூறியிருந்தார் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சீனிவாசன். இதன் பேரில் மோடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நம்பிக்கை மோசடி, கிரிமினல் சதித் திட்டம், மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா மேற்பார்வையில் துணை ஆணையர் ஸ்ரீதர் விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விசாரணைக்காக நேரில் வருமாறு மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வருமாறு அதில் கூறப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மோடி தவிர குணால் தாஸ் குப்தா, வேணு நாயர், ஆண்ட்ரூ ஜார்ஜியோ, சீமஸ் பிரையன், ஹரீஷ் கிருஷ்ணமாச்சார், அஜய் வர்மா ஆகியோருக்கும் சம்மன் போயுள்ளது.
அனைவரும் சிஆர்பிசி சட்டத்தின் 91வது பிரிவின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications