For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் பயணம்-பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியப் பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதீப் குமார் 3 நாள் பயணமாக இலங்கை வந்திருந்தார். இந்த பயணத்தின்போது பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு குறித்து அவர் இலங்கைத் தரப்புடன் பேசியுள்ளார்.

ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது ஆண்டுதோறும் இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸையும் சந்தித்துப் பேசினார் பிரதீப் குமார்.

நேற்று கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பிரதீப் குமார்.

English summary
Indian defence secretary Pradeep Kumar had a visit in Sri Lanka from Monday. He met Gothabaya Rajapakse, Foreign minister Peries. It was decided to hold an annual meeting between the two countries on defence issues. Pradeep Kumar also visited IPKF memorial in Colombo and rested a wreath in the memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X