2ஜி குறித்த கேள்விகளுக்கெல்லாம் முதலில் கருணாநிதி பதிலளிக்க வேண்டும்: தா.பாண்டியன்
புதுச்சேரி: 2ஜி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள், சிபிஐ வழக்குகள், சன் டிவியில் ரூ. 60,000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக வெளியான செய்தி ஆகியவற்றுக்கெல்லாம் முதலில் முதல்வர் கருணாநிதியும், திமுகவும் பதில் சொல்லட்டும். பின்னர் திமுக பொதுமேடைகளில் குரல் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார் சிபிஐ தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், ஊழலுக்கு முடிவு கட்டவும் இடதுசாரிகள், ஜனநாயகக்கட்சிகள் இணைந்து மாற்று ஆட்சிக்கு முயற்சிக்கிறோம். இதற்கான கூட்டணி குறித்து பிப்ரவரி மாதத்தில்தான் அறிவிக்க முடியும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொது கணக்குக்குழு விசாரணை, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்றாலும் முழு உண்மையைக் கண்டறிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அவசியம். பல்வேறு வழக்குகளில் சிபிஐ ஆவணங்களே காணாமல் போய்விட்டதாகக் கூறிய சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தங்கள் கட்சி மீது பொய் குற்றச்சாட்டு கூறப்படுவதாகவும் அந்தக் கட்சி தமிழகம் முழுவதும் பொதுமேடையில் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
2ஜி அலைகற்றை ஒதுக்கீடு செய்த மறுநாளே சன் டிவியில் 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டது. இந்த டிவியின் பங்குதாரர்களாக இருக்கும் கலாநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோர் திமுகவில் இருக்கின்றனர். அதுவும் தயாநிதிமாறன் மத்திய கேபினட் அமைச்சராக இருக்கிறார். அதனால் முதலில் கருணாநிதி அந்த டிவிக்குப் பதில் சொல்ல வேண்டும் அல்லது தவறாக வெளியிட்டதாக அவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்ல வேண்டும்.
பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் இருந்தே இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் 2001-ம் ஆண்டிலிருந்தே இதில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.43 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தணிக்கைத்துறை ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற 6 தனியார் நிறுவனங்கள் 10 நாளைக்குள் வேறு நிறுவனத்துக்கு அதிக தொகைக்கு விற்பனை செய்துள்ளன. இந்த ஏலத்தை அரசு நடத்தியிருந்தால் இழப்பீடு வந்திருக்காது உள்ளிட்ட காரணங்களை மத்திய தணிக்கைத்துறை கூறியுள்ளது. நீரா ராடியா தொலைபேசி நாடா பதிவு இப்போது உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் அனுமதியைப் பெற்றுதான் சிபிஐ இயக்குநர்களில் ஒருவர் இதைப் பதிவு செய்துள்ளார். அதனால் திமுக பொதுமேடைகளில் குரல் கொடுப்பதை நிறுத்திவிட்டு இவர்களுக்கு எல்லாம் முதலில் பதில் சொல்ல வேண்டும்.
அதே போன்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை மறு ஏலம் நடத்த வேண்டும். அப்படி செய்தால் 10 நாளில் என்ன நடந்தது என்று தெரிந்துவிடும். தமிழகத்தில் தனியார் கேபிள் டிவிக்களை அரசுடைமையாக்க வேண்டும். நம் நாட்டில் நாடாளுமன்ற முறை கேள்விக்குறியாகியுள்ளது. நீரா ராடியா போன்ற அரசியல் புரோக்கர்கள் சிபாரிசு தேவைப்படுகிறது என்றார் அவர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications