நெல்லை மாவட்ட உள்ளாட்சி இடைதேர்தல்: வேட்பு மனு தாக்கல் முடிந்தது
நெல்லை: தமிழகம் முழுவதும் ஜனவரி 10ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தல் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி நடக்கிறது.
இதில், நெல்லை மாவட்டத்தில் தென்காசி யூனியன் 6வது வார்டு கவுன்சிலர், மறுகால்குறிச்சி, சிங்கனேரி, இடையன்குளம், அலங்காரபேரி, புலியங்குளம் ஆகிய 5 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பணகுடி பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் மற்றும் 13 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளிட்ட 20 காலியிடங்கள் உள்ளன.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று தென்காசி யூனியன் 6வது வார்டுக்கு ஒருவரும், இடையன்குளம், அலங்காரபேரி கிராம பஞ்சாயத்து தலைவருக்கு தலா இருவரும், பணகுடி பேரூராட்சி வார்டுக்கு ஒருவருமாக 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரீசிலனை செய்யப்படும். வரும் 3-ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வரும் 10-ம் தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடக்கிறது. 12-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications