ரூ. 400 கோடி மோசடி செய்த சிட்டி வங்கி ஊழியர் சிவராஜ் பூரி கைது

ஹரியானா மாநிலம் கர்கானில் உள்ள சிட்டி வங்கிக்கிளையில் பணியாற்றி வந்தவர் இந்த பூரி. இவர் 20 பெரும் பணக்காரர்களை அணுகி அவர்களிடம் போலியான பல்வேறு திட்டங்களைத் தெரிவித்து அவர்களது கணக்குகளில் பெரும் பணத்தை முதலீடு செய்ய வைத்து அவற்றை மோசடியான முறையில் தனது கணக்குகளுக்கு மாற்றி விட்டார்.
இவ்வாறாக கிட்டத்தட்ட ரூ. 400 கோடி வரை அவர் சுருட்டியுள்ளார். இந்திய வங்கிகள் வரலாற்றில் ஒரு தனி நபர் இவ்வளவு பெரிய மோசடியைச் செய்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தற்போது பூரியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இன்று அவர் கைது செய்யப்பட்டதாகவும், விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்கான் போலீஸ் கமிஷனர் தேஸ்வால் கூறுகையில், மோசடியின் அளவு ரூ. 300 கோடியாகஇருக்கும் என சந்தேகிக்கிறோம். தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில்தான் மோசடி நடந்தது எப்படி என்பது தெரிய வரும்.
இந்த வழக்கை விசாரிக்க 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூரியுடன் மேலும் 3 பேருக்குத்த தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.
இந்த மோசடியில் பூரியின் தந்தை ரகுராஜ் பூரிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நார்வே மார்ட்டின் என்ற நிதித் தரகு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications