அருந்ததியர் இட ஒதுக்கீடு: கண்காணிக்க குழு-கருணாநிதி உத்தரவு
சென்னை: அரசு வேலைவாய்ப்பில் அருந்ததியருக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதல்வர் கருணாநிதி கடந்த 29.5.2009 அன்று ஆணையிட்டார்.
இந்த இட ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.
இந்த 3 சதவீத இட ஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications