மருத்துவமனை கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி!

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் காலனியை சேர்ந்த உதயகுமார்-வளர்மதி தம்பதியின் மூத்த மகள் பரணி (17). அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலை வகுப்பறையில் இவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரணி வீட்டுக்கு செல்லாமல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று புறநோயாளிகள் பகுதியில் உள்ள கழிவறையில் நுழைந்து உள்புறமாக தாழிட்டுக் கொண்டார்.

இதையடுத்து மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள் அங்கு கூடிவிட்டனர். பரணி கதவை திறக்காததால் அரை மணி நேரம் கழித்து கழிவறையின் கதவை ஊழியர்கள் உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு பரணிக்கு பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர் மகப்பேறு அறைக்கு கொண்டு வரப்பட்டு அவருக்கும் குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரணியிடம் விசாரித்ததில் அவருக்கும், உறவினரான வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு, உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+