திண்டிவனம்: பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இன்று முற்பகல் 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், வேலு, பொன்னுசாமி மற்றும் பாமக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.