கடலிலிருந்து கிளம்பிய மர்ம சத்தம்-நாகை மக்கள் பீதி
நாகப்பட்டனம்: நாகை மாவட்ட கடல் பகுதியில், கடலிலிருந்து பெரும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்தனர். அந்தப் பகுதிக்கு கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை கப்பல்கள் விரைந்துள்ளன.
நேற்று இரவு நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராம மக்கள் கடலிலிருந்து பயங்கர சத்தம் வந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். காதைக் கிழிக்கும் வகையில் அந்த சத்தம் மிக பலமாக இருந்தது. இதனால் மக்கள் குழப்பமடைந்து என்னவோ, ஏதோ என்று பயந்தனர்.
கடலைப் போய்ப் பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் கடலோர பாதுகாப்புப் போலீஸாரும் வந்தனர். அதேசமயம், கடலோரக் காவல் படையின் ரோந்துப் படகும், கடற்படையின் சிறிய ரக கப்பலும் சத்தம் வந்த திசை நோக்கி சென்றதை மக்கள் பார்த்தனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் கூறுகையில், எதனால் இந்த சப்தம் வந்தது என்பது தெரியவில்லை. வெடிகுண்டு வெடித்து அதனால் வந்த சத்தமா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை. தற்போது அங்கு ஒரு குழு சென்றுள்ளது. அது திரும்பி வந்த பிறகுதான் காரணம் தெரிய வரும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications